படைச் செருக்கு

திருக்குறள், மூலம்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். ⁠771

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. ⁠772

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு. ⁠773

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். ⁠774

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. ⁠775

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. ⁠776

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. ⁠777

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். ⁠778

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். ⁠779

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து. ⁠780

Comments

Loading comments…