படை மாட்சி

திருக்குறள், மூலம்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. ⁠761

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது. ⁠762

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். ⁠763

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை. ⁠764

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. ⁠765

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. ⁠766

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. ⁠767

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும். ⁠768

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. ⁠769

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். ⁠770

Comments

Loading comments…