பண்பு உடைமை

திருக்குறள், மூலம்

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு. ⁠991

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு. ⁠992

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. ⁠993

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புபா ராட்டும் உலகு. ⁠994

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு. ⁠995

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். ⁠996

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர். ⁠997

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை. ⁠998

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். ⁠999

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று. ⁠1000

Comments

Loading comments…