பிரிவு ஆற்றாமை

திருக்குறள், மூலம்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை. ⁠1151

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு. ⁠1152

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான். ⁠1153

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க்கு உண்டோ தவறு. ⁠1154

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு. ⁠1155

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை. ⁠1156

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை. ⁠1157

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு. ⁠1158

தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ. ⁠1159

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர். ⁠1160

Comments

Loading comments…