புணர்ச்சி மகிழ்தல்

திருக்குறள், மூலம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. ⁠1101

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து. ⁠1102

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு. ⁠1103

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள். ⁠1104

வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள். ⁠1105

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள். ⁠1106

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. ⁠1107

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு. ⁠1108

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன். ⁠1109

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு. ⁠1110

Comments

Loading comments…