புலால் மறுத்தல்

திருக்குறள், மூலம்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள். ⁠251

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. ⁠252

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். ⁠253

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்பொருளல்லது அவ்வூன் தினல். ⁠254

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. ⁠255

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். ⁠256

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின். ⁠257

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். ⁠258

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. ⁠259

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். ⁠260

Comments

Loading comments…