புல்லறிவாண்மை
திருக்குறள், மூலம்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு. 841
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம். 842
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. 843
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. 844
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும். 845
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. 846
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. 847
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய். 848
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. 849
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். 850
Comments
Loading comments…