பெண்வழிச் சேறல்

திருக்குறள், மூலம்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது. ⁠901

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். ⁠902

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். ⁠903

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று. ⁠904

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல். ⁠905

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர். ⁠906

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. ⁠907

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங்கு ஒழுகு பவர். ⁠908

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல். ⁠909

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல். ⁠910

Comments

Loading comments…