பொச்சாவாமை

திருக்குறள், மூலம்

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ⁠531

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ⁠532

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு. ⁠533

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு. ⁠534

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். ⁠535

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். ⁠536

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். ⁠537

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். ⁠538

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. ⁠539

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின். ⁠540

Comments

Loading comments…