பொருள் செயல் வகை

திருக்குறள், மூலம்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். ⁠751

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. ⁠752

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. ⁠753

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். ⁠754

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல். ⁠755

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். ⁠756

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. ⁠757

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை. ⁠758

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில். ⁠759

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. ⁠760

Comments

Loading comments…