பொழுது கண்டு இரங்கல்

திருக்குறள், மூலம்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது. ⁠1221

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை. ⁠1222

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும். ⁠1223

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும். ⁠1224

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை. ⁠1225

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன். ⁠1226

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய். ⁠1227

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை. ⁠1228

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து. ⁠1229

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர். ⁠1230

Comments

Loading comments…