மடி இன்மை

திருக்குறள், மூலம்

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும். ⁠601

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். ⁠602

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. ⁠603

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு. ⁠604

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன். ⁠605

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது. ⁠606

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர். ⁠607

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். ⁠608

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும். ⁠609

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. ⁠610

Comments

Loading comments…