மெய் உணர்தல்

திருக்குறள், மூலம்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. ⁠351

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. ⁠352

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. ⁠353

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. ⁠354

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. ⁠355

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. ⁠356

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. ⁠357

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. ⁠358

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். ⁠359

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமம் கெடக்கெடும் நோய். ⁠360

Comments

Loading comments…