வரைவின் மகளிர்

திருக்குறள், மூலம்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். ⁠911

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். ⁠912

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று. ⁠913

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். ⁠914

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். ⁠915

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள். ⁠916

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள். ⁠917

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு. ⁠918

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு. ⁠919

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு. ⁠920

Comments

Loading comments…