வலி அறிதல்

திருக்குறள், மூலம்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். ⁠471

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். ⁠472

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். ⁠473

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். ⁠474

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின். ⁠475

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும். ⁠476

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி. ⁠477

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. ⁠478

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும். ⁠479

உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும். ⁠480

Comments

Loading comments…