வினைத் திட்பம்

திருக்குறள், மூலம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற. ⁠661

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ⁠662

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும். ⁠663

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல். ⁠664

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும். ⁠665

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். ⁠666

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து. ⁠667

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல். ⁠668

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை. ⁠669

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. ⁠670

Comments

Loading comments…