வினைத் தூய்மை

திருக்குறள், மூலம்

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும். ⁠651

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. ⁠652

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅதும் என்னு மவர். ⁠653

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர். ⁠654

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று. ⁠655

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. ⁠656

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. ⁠657

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். ⁠658

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. ⁠659

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. ⁠660

Comments

Loading comments…