விருந்து ஓம்பல்

திருக்குறள், மூலம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. ⁠81

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று. ⁠82

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று. ⁠83

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். ⁠84

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். ⁠85

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்வருந்து வானத் தவர்க்கு. ⁠86

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். ⁠87

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். ⁠88

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. ⁠89

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. ⁠90

Comments

Loading comments…